வெடித்துச் சிதறிய கையடக்க தொலைபேசி – காலியில் சம்பவம்.

தனது கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு நித்திரைக்கு சென்ற நிலையில் கையடக்க தொலைபேசி வெடித்துச் சிதறிய சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட நபர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது தான் உடனடியாக செயற்ப்பட்டதால் உயிர்தப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்படும் கையடக்க தொலைபேசி வகைகளில் ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.

கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு உறங்குவது அல்லது சார்ஜில் இருந்த வண்ணம் அதனை பயன்படுத்துவது போன்ற விடயங்கள் ஆபத்தை விளைவிக்கும் செயற்பாடுகள் என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *