சிம்பாப்வே – இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 168 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.
முதல் ஓவரை சிக்கந்தர் ராசா வீசிய வீசினார். டொஸ்ஸாக வந்த முதல் போலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.
அந்த போல் நோ போல் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரீ ஹிட்டாக வந்த அடுத்த போலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஒரே பந்தில் 13 ஓட்டங்களை குவித்தது.
இதன்மூலம் டி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ஓட்டங்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா அணி படைத்துள்ளதுடன் ஒரே பந்தில் 13 ஓட்டங்களை ஜெய்ஷ்வால் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
மேலும், டி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசியுள்ளார்.