மிஹிந்தலை வைத்தியசாலையினால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்து காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 6 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்களே இவ்வாறு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதையடுத்து கடும் சுகவீனமடைந்துள்ளனர்.
இந்த மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு செப்சிஸ் ( septicemia) நோய்க்கு சிகிச்சை பெறச் சென்றபோது, அங்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாக சுகவீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.