மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி  வைத்தியசாலைக்கு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று (15) சென்றமையால் அங்கு பதற்றமான நிலைமை காணப்படுகிறது.

கடந்த  8ஆம் திகதி நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா, தான் விடுமுறையில் செல்வதாகவும் மீண்டும் வருவேன் எனக் கூறி சென்றார்.

அதனையடுத்து வடமாகாண சுகாதார திணைக்களத்தால் வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் எனக் கூறிய முன்னாள் பதில் அத்தியட்சகர் அர்ச்சுனா பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்பட்டதால் பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடியவேளை பொலிஸார் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதன் போது , நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *