இன, மத வேறுபாடுகளின் அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினரோடு மன்னார் மாவட்டத்திற்கு மீண்டும் வருகை தரக்கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியைத் தருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (15) தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை மன்னார் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுத் தருவோம்!

வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று நான் இதற்கு முன்னரும் தெரிவித்துள்ளேன்.

வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பாரிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

வடக்கில் சட்டவிரோதமான முறையில் மீன் வளங்கள் சூறையாடப்படுவதனால் மீனவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் பொருட்டு, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர தலையீட்டின் மூலம் தற்போதைய ஆட்சியாளர்களால் வழங்க முடியாதுபோயுள்ள தீர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வடக்கு மக்களின் ஜனநாயக, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

இன, மத வேறுபாடுகளின் அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

எல்லோரும் ஒரே தாய் தந்தையின் பிள்ளைகளாக செயற்படுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என கருதுகிறேன். இந்த நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் உள்ளது.

அதற்கு நாங்கள் ஒருதாய் பிள்ளைகள் போன்று தீர்வு பெற்றுக்கொள்வது அவசியம். வங்குரோத்து நிலையிலிருந்து மீள சாதி பேதங்கள், மத பேதங்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி நியாயத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பேன்.

மன்னார் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

அக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான விசேட திட்டங்கள், இலங்கை முழுவதும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டங்களை கொண்டுவரவிருக்கிறேன். நுண்கடன் வலையில் சிக்கித் தவிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் இந்த மன்னார் மாவட்டத்திலும் காணப்படுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலையான தீர்வொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்கள் வேறு ஓரு தரப்பைச் சேர்ந்த மக்கள் அல்ல. அவர்கள் இலங்கையினது ஒரு சமூகமாகும். வடக்கிலும் கிழக்கிலும் இலங்கை குடிமக்களே வாழ்ந்து வருகின்றனர். எனவே மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்த வேண்டும்.

மாகாண சபை முறையின் ஊடாக முறையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் வலுவான மாகாண சபை முறைமையை உருவாக்குவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *