அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்

அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் போது அந்த விடயத்துடன் தொடர்புடைய அனுபவமுள்ள ஒருவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், அதன் படி கே.என்.சொக்சி போன்ற சட்டத்தரணிகளைக் கொண்டு அவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது சொக்சி உயிருடன் இல்லை, எனவே இந்த விடயத்தை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்க வேண்டி ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவர் தவறிழைத்தமையினால் தற்போதைய பிரச்சினையான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.

காலி, பெலிகஹவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று (19) திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *