(UDHAYAM, GALLE) – காலி விளையாட்டுத் திடலிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
காலி கோட்டை உலக மரபு நகரமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த உலக மரபு நகர வளாகத்திற்குள் காலி விளையாட்டுத் திடலின் மூன்று கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மாத்திரமே அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பணிப்பாளர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.