மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் இலங்கை கண்டனம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் (Manchester )நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

மான்செஸ்டர் நகரில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது நேற்று நள்ளிரவு இரவு 10.30 (லண்டன் நேரம் ) மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து, இசை நிகழ்ச்சியை பார்வையிட்ட மக்கள் சிதறி ஓடினர். இக்குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதிக்கு அருகில் உள்ள விக்டோரியா ரயில் நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது மூடப்பட்டுள்ளது. மான்செஸ்டர் நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/gallerye_.jpg”]

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்ன தெரிவிக்கையில் ,

கொடூரமான இத்தாக்குதல் சம்பவத்தினால் இலங்கை ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடையவேண்டும் என்று பிரார்த்திப்பதாக அவரது ருவிற்றர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/manchester-arena-0522-.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *