குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடரின் பின்னர் முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார தீர்மானித்துள்ளார்.

39 வயமான குமார் சங்ககார தற்போது இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் போட்டியில் சர்ரே அணி சார்பில் விளையாடும் நிலையில், மிடில்சேக்ஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சதம் பெற்று கொண்டார்.

சங்ககார இதுவரை முதல் தரப் போட்டிகளில் 20 அயிரத்து 012 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

மேலும் அவர் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38 சதங்களுடன் 12 ஆயிரத்து 400 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதனுடன் 404 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர், 25 சதங்களுடன் 14 ஆயிரத்து 234 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *