தனது மகளை 10 வருடங்களாக துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

(UDHAYAM, COLOMBO) – இளம் வயது முதல் சுமார் 10 வருடங்களாக  தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று கடுமையான வேலையுடன் கூடிய 45 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதற்கு மேலதிகமாக , அவரது மகளுக்கு மூன்று இலட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் மற்றும் 30 ஆயிரம் ரூபா அபராதமும் குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் அவரின் சிறைத்தண்டனையை மேலும் 6 வருடம் நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *