களுத்துறை மண்சரிவில் 37 பேர் பலி! – இரத்தினபுரியில் 28 மரணங்கள்!(படங்கள்)

(UDHAYAM, COLOMBO) –     களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

அதிக மழை மற்றும் காற்று காரணமாக பதுரலிய டெல்கிட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரவில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ள நிலையில் , குறித்த வீடுகளில் 11 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் , இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் , கொஸ்குலன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

புளத்சிங்கள பிரதேசத்தின் பரகொட , கல்கெடிய , மோல்காவ , இஹல வெல்கம , யடகம்பிடிய , தியகடுவ , நாகஹதொல , குகுலேகல , பாஹியன்கல வீதி மற்றும் கலவெல்லாவ போன்ற பிரதேசங்கள் 10அடி வரை நீரில் மூழ்கியுள்ளன.

தற்போதைய நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் படி திப்பொடுவாவை பிரதேசத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அந்த வீடுகளில் இருந்த 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை , மொரவக தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொபவக பிரதேசத்தில ்இரண்டு வீடுகள் மண்சரிவில் சிக்கியுள்ள நிலையில் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.

யடகம்பிடிய நாயதொல லொக்கெவத்த பகுதியில் இரண்டு வீடுகள் மண்சரிவில் புதையுண்டுள்ள நிலையில் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.

போகஹவத்த மஹகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் நான்கு வீடுகள் புதையுண்டுள்ள நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஒருவர் காயமடைந்த நிலையில் புளத்சிங்கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெலவத்த நகர் முதல் கும்பதுவ வரை 4 அடி வரையில் நீர் தேங்கியுள்ள நிலையில் , குறித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பம்பருல்ல , வலல்லாவிட , பொல்கம்பல பிரதேசங்கள் தற்போதைய நிலையில் 4 அடி வரை நீரில் மூழ்கியுள்ளன.

மதுகம திக்பிடிய சந்தி இரண்டரை அடி வரை நீரில் மூழ்கியுள்ள நிலையில், மதுகம ஹொரணை வீதி குடலிகம பிரதேசத்தில் 8 அடி வரை நீரில் மூழ்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அலுத்கம மதுகம வீதியின் ஓவ்டிகல பிரதேசத்தில் மூன்று அடி வரை நீர் நிரம்பியுள்ளது.

இதேவேளை , வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை மீட்கும் பணிக்காக 300க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , நிவாரணப்பணிகளுக்காக 150க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.

விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிக்காக விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர்கள் இரண்டும் , தேவையான பாதுகாப்பு படையினரை குறித்த பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக எம்.ஐ 17 ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் , விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் குறித்த பகுதி தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்காக தரையில் அல்லது நீரில் தரையிறக்கக்கூடிய விமானங்கள் இந்த மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

அதேபோல் , 0112 343 970 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து மீட்புப்பணிகளுக்காக இராணுவத்தின் உதவியினை பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலும் , நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறப்பு அனர்த்த குழுவொன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது.

இந்த அனர்த்த நிலை காரணமாக பல்வேறு திடீர் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na17.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na16.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na15.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na14.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na13.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na12.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na11.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na10.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na9.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na8.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na7.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/na.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *