எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கும்

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 29ம் 30ம் திகதிகளில் மீண்டும் அடைமழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை தற்சமயம் குறைவடைந்துள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

வெலங்கெல கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே தடவையில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

தல்துவ, வெல்லங்கல பிரதேசங்களிலிருந்து இரண்டாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

மின் நிலையங்களுக்கு அமைவாக உள்ள வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையால் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று செய்தி பரவியமை மக்கள் இடம்பெயர்ந்தமைக்கான காரணமாகும்.

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் அருகிலுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. களனி கங்கைக்கு அமைவாக வசிக்கும் மூவாயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தையிலிருந்து செல்லும் வாகனங்கள் கடுவல மாத்திரமே அனுமதிக்கப்படும்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார வசதிகளை பூர்த்தி செய்வதற்காக வைத்திய குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *