இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் நிலவும் இடர்நிலைமைக்கு மத்தியில் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலகின் முன்னணி நாடுகள் பல முன்வந்துள்ள.

அமெரிக்கா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இன்று காலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.

ஜப்பான் தூதுவர் கெனெச் சுகனுமா இன்று காலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்தபோது இடர் நிலைமையில் பல்வேறு துறைகள் ஊடாக ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

குடிநீர் சுத்திகரிப்பு மின்பிறப்பாக்கி ஆகியவற்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். அத்தோடு நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஜப்பானின் விசேட குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகவும் ஜப்பான் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அதுல் ஹெசாப் கருத்து தெரிவிக்கையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் எத்தகைய சந்தர்ப்பத்திலும் நிவாரணம் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/Ravi-karunanayake-and-Athul-keshap-udhayamnews.png”]

இதேவேளை இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் கருத்து தெரிவிக்கையில் ,

இடர்நிலமை தொடர்பில் இலங்கை அரசாங்த்திற்கும் பொதுமக்களிற்கும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். இயற்கை அனர்த்தம் தொடர்பான நிவாரண நடவடிக்கையில் பிரித்தானியா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/RAvi-K-meets-foreign-aide-diplomats-flood-sri-lanka-aid-udhayamnews.png”]

இதேவேளை சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் அம்ஜற் உசைன் பீ சாகில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/Ravi-meets-more-diplomats-udhayamnews.png”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *