தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் உயிரழந்த, சேதமடைந்த சொத்துக்கள் சார்பில் தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு வழங்கவுள்ளது.

இயற்கை அனர்த்தங்களில் பலியான உயிர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்க தயார் என தேசிய காப்புறுதி நிதியம் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சகல வீடுகளும் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் காப்புறுதித் திட்டத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. இதன் பிரகாரம் தேசிய காப்புறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ஆயிரத்து 500 கோடி ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சனத் சி டி சில்வா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களில் 90 சதவீதமானோருக்கு இழப்பீட்டுத் தொகை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக 390 கோடி ரூபா செலவிடப்பட்டது. சமீபத்திய வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *