(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 92 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களால் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இதுவரை அங்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதனுடன் களுத்துறை மாவட்டத்தில் 63 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் அனர்த்தங்களால் ஆயிரத்து 735 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், 9 ஆயிரத்து 432 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.