பொய் சொல்லி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியரால் பரபரப்பு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி – கண்டாவளைக் கோட்டத்துக்கு  உட்பட்ட  பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டர்  சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது  என அழைத்து சென்றுளார் எனவும்,  ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய பொழுதும் மாணவி கருத்தரங்கில் இருக்கின்றார், சிறிது நேரத்தில் எடுங்கள் எனக் கூறுகின்றாரே தவிர மாணவியை தொடர்பு  கொள்ள முடியவில்லை என  தர்மபுரம் பொலிஸ்  நிலையத்தில்  மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்து சில மணிநேரத்துக்குள்  மாணவியும், ஆசிரியரும்  விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை கிளிநொச்சி  சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஆசிரியர் தர்மபுரம் போலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.

இருப்பினும் நேற்று எங்கும் கருத்தரங்குகள் எவையும் நடைபெற வில்லை என முதலாம் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆசிரியரை முன்னிலைப்படுத்த  இருப்பதாக தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி டி.எம்.சத்துரங்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் எஸ்.என்.நிபோஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *