பாடசாலை நுழைவாயில் தமிழ் கட்டிட கலையை கொண்டிருக்கவில்லை

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதையின் நுழைவாயில் கட்டிட அமைப்பு தமிழ் கட்டிட கலையை வெளிப்படுத்தவில்லை என்றும் அது சீன கட்டிட கலையை கொண்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுழைவாயில் கட்டிடம் அமைப்பதற்கான உள்ளீடுகள் பாடசாலை சமூகத்தினரால் வழங்கப்பட்டு  இராணுவத்தின் இலவச மனித வலுவை பயன்படுத்தியும் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நுழைவாயில் கட்டிட அமைப்பை இராணுவத்தினர் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ளனர் எனவும் அது சீன கட்டிட கலையை வெளிப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் பல்கலைகழத்தின்புலமைசார்  ஒருவரிடம் குறித்த நுழைவாயிலின் புகைப்படத்தை அனுப்பி கருத்து கேட்ட போது

இந்த நுழைவாயில் கட்டிட அமைப்பு சீன கட்டிட கலையின் அம்சத்தை  கொண்டுள்ளது என்றும் சீன கட்டிட கலை என்பது பௌத்ததிற்கு நெருக்கமான கட்டிட கலை எனவும் தெரிவித்த அவர் தமிழ்ச் சூழலுக்குள் இது ஒரு புதிய விடயமல்ல என்வும் தெரிவித்த அவர் வரலாற்றோடு சம்மந்தப்பட்ட விடயங்கள் என்பதால் பொது இடங்களில் கட்டிடங்களை அமைக்கும் போது அவை தமிழ்  பண்பாட்டு விழிமியங்களை பிரதிபலிக்கின்ற வகையில் இருப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு குறித்த நுழைவாயில் கட்டிட கூரையின் நான்கு பக்க கீழிறங்கிய வளைவு சீன கட்டிட கலைக்குரியது எனவும்   தலதா மாளிக்கை  உட்பட தெற்கில் இவ்வாறு கூரைகளை கொண்ட பல கட்டிடங்கள் காணப்படுகின்றனவும் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவத்தின் இலவச மனித வலுவை பயன்படுத்துவது தவறல்ல ஆனால் கட்டிட அமைப்பு வடிவத்தை தீர்;மானிப்பது நாங்களாக இருக்க வேண்டுமே தவிர இராணுவமாக இருக்க கூடாது என கல்விச் சமூகமும் தெரிவித்துள்ளது.

எஸ்.என்.நிபோஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *