ஹட்டன் சந்தைப்பகுதி வர்த்தகர்கள் ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைகுட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஹட்டன் சந்தைப்பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது

ஹட்டன் நகர சந்தைப்பகுதி வியாபாரிகளே 05.06.2017 காலை 11.30 மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் நகரசபையினால் சேகரிக்கப்படும் குப்பைகழிவுகளை சந்தைப்பகுதியில் கொட்டுவதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளவதாக ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்

வியாபாரத்தை முன்னெடுக்கமுடியாத நிலையில் நருக்கும் வரூம் பொதுமக்களும் பாதீப்புக்குள்ளாவதுடன் துர்நாற்றம் வீசுவதால் சுவாசிக்க முடியாதுள்ளதாக தெரிவித்தனர்

அத்தோடு 05.06.2017 காலை ஹட்டன் நகரசபையின் செயலாளருடன்  இடம்பெற்ற கலந்துலையாடலில் இனக்கப்பாடு எட்டாத நிலையிலே கவயீர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்தாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொரிவித்தார் இது தொடர்பில் ஹட்டன் நகரசபையின் செயலாளர் எஸ் பிரியதர்ஷினியிடம் கேட்டபோது ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பெருத்தமான இடமொன்று இல்லாத நிலையில் வெளிப்பிரதேசத்தில் குப்பைகளை கொட்ட முற்பட்டபோதும் அதற்கும் பல்வேறு எதிர்புகள் ஏற்பட்டது இந்நிலையில் குப்பை கொட்டுவதற்கு பொருத்தமான இடத்தினை பெற்றுதறுமாறும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தபோது இதுவரையில்இடம்கிடைக்கவில்லை இவ்வாறான நிலையிலேயே  தற்காளிகமாக ஹட்டன் நகரசபைக்குற்பட்ட சந்தை பகுதியில் குப்பைகளை கொண்டுவதாக தெரிவித்தார்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/6-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/2-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/3-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/4-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/5-2.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *