எதிர்வரும் 24 மணி நேரத்தில் பலத்த காற்று! – அவதான எச்சரிக்கை!

(UDHAYAM, COLOMBO) – புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும ்மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கையை வௌியிட்டு அந்த நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாட்டை சுற்றியுள்ள மற்றைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும் எனவும் , இதன் காரணமாக குறித்த கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.

இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு காலநிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் வடக்கு மாகாணத்தை தவிர நாட்டின் மற்றைய பகுதிகளில் விட்டு விட்டு வீசும் காற்று  மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளுக்கும், தெற்கு ,வடமேல்,மேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் போன்று மாத்தறை , பதுளை , அம்பாறை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களுக்கும் இவ்வாறு காற்று அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163175_11-1.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *