அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்

(UDHAYAM, COLOMBO) – பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்  ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கக்கூடிய வலிமை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

சமிபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு குறித்து நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

இவ்வாறான பாதிப்புக்களை தொடர்ந்தும் எதிர்கொள்ளும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அனர்த்தம்ஏற்பட்ட நாள் முதல் அரச பொறிமுறை, சிவில் மக்களுடன் ஒன்றிணைந்து உன்னதமான பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை அனர்த்தத்தைக்குறைப்பதற்கு புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று விவாத்தில் உரையாற்றிய அமைச்சர்சுசில் பிரேம் ஜயந்த குறிப்பிட்டார்.

விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அனர்த்தத்தின் போது பொதுமக்கள் கட்சி வேறுபாடின்றி செயற்பாட்டார்கள். பாதுகாப்பற்ற இடங்களில் உள்ளமக்களுக்கு காணிகளை வழங்குவதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றுகையில், மக்கள் தமது வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்துக்n காள்வதற்காக மேற்கொள்ளப்படும்நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும் என்றுகுறிப்பிட்டார்.

இநத்ச் சந்தர்ப்பத்தில் அரச நிறுவனங்களின்பங்களிப்புகுறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *