வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

அட்டன் வெலிஓயா  ஆகரஓயா வழியாக வட்டவளைக்குச் செல்லும் பாதை காபட் பாதையாக புனரமைக்கும் பணிகள் முடிவுறும் நிலையிலுள்ளது.

ஐ ரோட் திட்டத்தின் கீழ்  ஒன்பதரை கிலோ மீற்றர் தூரமுள்ள வெலிஓயா – வட்டவளை பாதை

காபட் பாதையாக செப்பனிடப்பட்டுள்ளதால் செனன் கே . எம் , மாணிக்கவத்தை , வெலிஓயா , ஆகரஓயா , அகவத்தை , லொனெக் பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்களான பழனி திகாம்பரம் , வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி இந்தப்பாதைப் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தப்பாதை புனரமைப்புப் பணிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் பார்வையிட்டார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *