இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்றவர்களுக்கு விமானப்பயணச்சீட்டுகள்

(UDHAYAM, COLOMBO) – இஸ்ரேல் நாட்டில் விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பை பெற்றவர்களுக்கு தேவையான விமாப்பயணச்சீட்டுக்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு இலங்கை வேலைவாய்ப்பு முகவர் நிறுவகத்தில்  நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அமைச்சர் தலதா அத்துக்கோரள தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 22 பேருக்கு விமானச்சீட்டுக்கள் வழங்கப்பட்டது. இந்த வருடத்தில் ஜனவரிமாதம் முதல் இதுவரை 201இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளனர்.

2016ம் ஆண்டில் 369 பேர் விவசாயத்தொழில் துறைக்காகவும் 2015 ம் ஆண்டில் 85 பேர் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பில் இணைந்துகொண்டனர்.

இவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *