பாடசாலை மாணவியை வன்புனர்குற்படுத்த முயற்சித்ததை எதிர்த்து ஆர்பாட்டம் – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று (14.06.2017) பிற்பகல் 2.00  மணியளவில் டயகம நகரில் மாணவர், பெற்றோர் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த மாணவி, நேற்று (13.06.2017) காலை 7.00 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரால் பாலியல் வன்புனர்புக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை, அதேதோட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர், அவ்விடத்தினை விட்டு ஓடியதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்குற்றத்தினைப் புரிந்தாக சந்தேகிக்கப்படும் நபருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தக் கோரியுமே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன் போது மோனிங்டன் தோட்டத்திற்கு பொது போக்குவரத்து இல்லாமை காரணமாகவே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளதாக பெற்றோர்களும் மாணவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டயகம நகரில் உள்ள 59 கடைகளும் சுமார் ஒரு மணித்தியாலம் மூடப்பட்டிருந்து ஆதரவு வழங்கிருந்தமை குறிப்பிடதக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/l-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ll-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/lll-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/lllll.jpg”][ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/l-1.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *