(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றமைக்கு காரணமாக அமைந்த முக்கிய தீர்மானம், முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ்.தோனியினால் மேற்கொள்ளப்பட்டது என்று இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
போட்டியின் ஆரம்பத்தில் பங்களாதேஸ் அணி பலமாக இருந்தது.
இதன்போது சுழற்பந்து வீச்சாளர் கேதார் ஜாதவ் அழைக்கப்பட்டார்.
இந்த தீர்மானத்தை தாமும், தோனியும் இணைந்தே மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேதார் ஜாதவ் பயிற்சிகளின் போது சரியாக பந்துவீசி இராத போதும், நேற்றைய போட்டியில் நெருக்கடியான நிலையில் சிறப்பாக செயற்பட்டதாகவும் கோஹ்லி சுட்டிக்காட்டியுள்ளார்.