சித்திர போட்டியில் வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அமைச்சர் ராதா கலந்துகொண்டு வழங்கிவைத்தார்

(UDHAYAM, COLOMBO) – ஜீவ ஊற்று ஆங்கிளம் அகடமியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சித்திர போடியில் வெற்றிபெற்ற 1000 மாணவர்களுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வு 18.06.2017 ஹட்டன் டீ.கே.டயில்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது

அதிவணக்கத்திற்குறிய போதகர் எஸ். நடரஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டியில் வெற்றிபெற்ற  முன்பள்ளி மாணவர்களுக்கு  பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *