பாதுகாப்பற்ற பகுதியில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – பாதுகாப்பற்ற இடங்களில் வசித்து வருவோருக்கு பாதுகாப்பான இடங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதற்குப் பொருத்தமான காணிகளை இனங்காணும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

நேற்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் , அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசாங்க அமைச்சுக்களுக்கான பொறுப்புக்கள் பற்றி பேசும் சிலர் கடந்த அரசாங்க காலத்தில் மௌனம் சாதித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படாத பல சிரேஷ்ட அமைச்சர்கள் அந்த ஆட்சியில் இருந்ததை அவர்கள் மறந்திருப்பதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *