இன்னும் 3 நாட்களில் காலநிலையில் மாற்றம்..

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நிலவும் காலநிலை மாற்றமடையக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க எமது செய்தி பிரிவிற்கு குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மண்சரிவு அபாய எச்சரிக்கையுடைய 210 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கையுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *