ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது- முற்றுகை நடவடிக்கை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ரயில் பாதையில் செல்வோரை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தமது மற்றும் ஏனையோரை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆபத்தான ரீதியில் செயல்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறானவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவர் என்றும் மூவாயிரம் ரூபா வரையில் தண்டப்பணத்திற்கு உள்ளாக வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவையில் 26 இடங்களில் 500 ஊழியர்களை இதற்காக பயன்படுத்தி தற்பொழுது கரையோர ரயில் பாதையை இலக்காக கொண்டு இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்பொழுது இந்த அனர்த்த நிலை தொடர்பாகவும் இதனால் ஏற்படும் தண்டனை பாரியது என்பது குறித்தும் தெளிவுபடுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. இதற்கு பொதுமக்களிடமிருந்து சிறந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி செல்பி புகைப்படம் ரயில் பாதையில் எடுப்பதனால் இந்த விபத்துக்கள் கடந்த சில தினங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை கவனத்தில் கொண்டு ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது என்பது குறித்த சட்டம் கடந்த 14 ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *