பெண் கைதியை கொடூரமாக கொலை செய்த சிறைக்காவலர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மும்பையில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில், பெண் கைதியை சிறைக்காவலர்கள் அடித்து சித்தரவதை செய்து, அவரின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டதால், பெண் கைதி உயிரிழந்துள்ளார்.

மஞ்சுளா கோவிந்த் செட்டி என்ற பெண் கைதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர், காலை உணவாக வழங்கப்பட்ட இரண்டு முட்டை, 5 ரொட்டிகள் தனக்கு கிடைக்கவில்லை என சிறை காவலரிடம் அவர் முறையிட்டுள்ளார்.

இவரின் இந்த கேள்வியால் கோபமடைந்த சிறைகாவலர்கள், அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

மஞ்சுலாவை அந்த சிறை காவலர் தனி அறைக்கு அழைத்து சென்றதுடன், அங்கு அவரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.

அதோடு அங்கு வரவழைக்கப்பட்ட மேலும் சில காவலர்கள், அவரை அடித்துள்ளனர். இதனால் அவரின் உடல் முழுவதும் அதிக காயம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், கைதியின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டு காவலர்கள் கொடுமையான முறையில் செயற்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மஞ்சுளா, இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ஏனைய கைதிகள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சுளாவின் மரணத்தையடுத்து, சிறையில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், சிறை காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *