ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி அறிமுக நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – சுகாதார அமைச்சில் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு  ஹியுமன் பப்பிலோமா Human Papilloma virus vaccine என்ற வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கையில் நுண்காம்புக்கட்டி புற்றுநோயை தடுப்பதற்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை  அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் நடத்தர வயதுடைய பெண்கள் மத்தியில் சுமார் ஆயிரம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக வைத்தியசாலை புள்ளிவிபரங்களில் தெரிய வருகிறது.

உலகம் முழுவதிலும் இந்த புற்றுநோயை தடுப்பதற்காக இரண்டு நடைமுறைகள் முன்ணெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *