(UDHAYAM, COLOMBO) – கல்கிஸை – கொத்தலாவலபுர பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி, சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயமேற்படுத்திய இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு மற்றும் இரத்மலானை பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும், முச்சக்கரவண்டி சாரதியை காயமடையசெய்துவிட்டு 36,000 ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் இரண்டை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரும் கல்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, எதுல்கோட்டை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.