(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பற்றிக் சாயமிடும் பயிற்சி நெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் 03.07.2017 நேற்று கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபரும் மேற்படி நிலையத்தின் உதவிப்பணிப்பாளருமாகிய திரு. த.பிருந்தாகரன் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
மகளீர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலக ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான
வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் சுயெதொழில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றையதினம் பற்றிக்சாயம் இடும் பயிற்சிநெறியில் கலந்துகொண்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 5000 ரூபா பெறுமதியான மூலப்பொருட்களும் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் தொடர்ச்சியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும்
இவர்களுக்குரிய மேலதிக பயிற்சிகளும் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.என்.நிபோஜன்
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/1.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/3.jpg”]