வித்தியா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் மரணம், மூன்று வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என,  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ். மயூரதன் விசாரணை மன்றில் சாட்சியமளித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணை மன்றில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகிறது.

நேற்றையதினம் மன்றில், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.மயூதரன் மற்றும் தடவியல் காவற்துறையினர் சாட்சியமளித்திருந்தனர்.

சாட்சியத்தின் போது, வித்தியாவின் உடலில் 8 காயங்கள் இருந்ததாகவும், மூன்று சந்தர்ப்பங்களில் இறப்பு நிகழ்ந்திருக்கலாம்.

ஓன்று துணியினால் வாயை அடைத்த போது, சுவாசப்பாதை அடைப்பட்டு  உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம்,

2 தலைப்பகுதியில் ஏற்பட்ட அடிகாயத்தினால், இரத்த கசிவு ஏற்பட்டு அதிகமான குருதி வெளியேற்றத்தினால் மரணம் சம்பவத்திருக்கலாம்.

அல்லது  கழுத்தில் கட்டப்பட்ட பட்டி இறுக்கப்பட்டதன் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கலாம் அல்லது மூன்றும் ஒரே நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்தார்.

இதுவரையில் 10 சாட்சியங்கள், சாட்சியமளித்துள்ளன.

இன்னும் 40 சாட்சியங்கள் சாட்சியமளிக்கவுள்ள நிலையில், தொடர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 26 ஆம் திகதி புதன்கிழமை வரை அடுத்தக்கட்ட விசாரணை அமர்வுகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *