அனுமதியின்றி செய்த காரியத்தால் மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!!

(UDHAYAM, COLOMBO) – தனது மனைவியின் கல்வியை நிறுத்துவதற்காக கணவர் ஒருவர் செய்த கொடூரம் செயல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் பங்களாதேஸில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கணவர், தனது மனைவியின் வலது கையின் 5 விரல்களையும் வெட்டியுள்ளார்.

தனது அனுமதியின்றி பட்டப்படிப்பை மனைவி பயின்று வந்ததன் காரணமாக அவர் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெட்டப்பட்ட விரல்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டதன் காரணமாக அவற்றை மீண்டும் சத்திரச் சிகிச்சை ஊடாக இணைக்க முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்த கொடிய சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளவர் Hawa Akhte  என்ற 21 வயது யுவதியாவார்.

இவ்வாறு அவரின் விரல்களை வெட்டிய கணவர் Rafiqul Islam என்ற 30 வயதான நபர் ஆவார்.

குறித்த நபர் 8 ஆம் வகுப்பு வரையே கல்வி பயின்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் தனது மனைவி பட்டப்படிப்பை பயில்வது தொடர்பில் பொறாமை ஏற்பட்டு இவ்வாறு அவரின் விரல்களை வெட்டியிருக்கலாம் என அந்த நாட்டு காவற்துறை சந்தேகிக்கிறது.

குறித்த கணவர், காவற்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்தப் பெண் தனது பெற்றொரின் வீட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *