இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ரஸ்னி ராசிக்

(UTV|COLOMBO)-2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ரஸ்னி ராசிக் எனும் முஸ்லிம் பெண் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் பராமரிப்பு, உலக அமைதி மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகளில் இவரது பங்களிப்புகளுக்காகவே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கையில் இவ்விருது பெற்ற அர்ஜுன ரனதுங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, ரோஸி சேனாநாயக்க, முத்தையா முரளிதரன், சனத் ஜயசூரிய, ஒடாரா குணவர்தன ஆகியோர் மத்தியில் இளம் வயதில் (28) விருது பெற்றவராக ரஸ்னி ராசிக் திகழ்கின்றார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *