இன்று உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினம்

(UTV|COLOMBO)-2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு ஞாயிறாக அமைந்தது.

இந்தேனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்து சமுத்திரத்தில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து, ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

சுமாத்திரா தீவில் மையம் கொண்ட 9.1 ரிக்டர் அளவான பூகம்பம் அந்தமான், தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மலேசியா, மியன்மார் உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளில் கரையோரங்களை சூரையாடிச் சென்றது.

இந்த ஆழிப்பேரலையானது ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டது.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது.

கோடிக்கணக்கான சொத்துகள் உடைமைகளையும் சேதமாகின.

இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் இலங்கையிலும் காவுகொல்லப்பட்டன.

ஐந்துலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

அதுமட்டுமன்றி சொத்துகள்,உடைமைகளின் சேதத்தால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கின.

ஆழிப்பேரலை என்ற சொல்லையும் அதன் தாக்கத்தையும் 2004 ஆம் ஆண்டுவரை அறிந்திருக்காத மக்கள்,
கடலில் திடீர் என ஏற்பட்ட ஆழிப்பேரலையை ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்றனர்.

இதன் காரணமாகவே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கடல் கோளுக்கு இறையாகின.

இதன் பின்னர் சுனாமி என்னும் ஆழிப் பேரலை தொடர்பான அச்சமும் அது தொடர்பான விழிப்புணர்வும் உலக மக்களிடம் ஏற்படத் தொடங்கியது.

இன்றைய நிலையில் ஆழிப் பேரலை அனர்த்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல்வேறு உலக நாடுகளில் கண்காணிப்பு மையங்கள் நிறுவப்பட்டு, சமுத்திரப்பரப்பும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டுவருகின்றன.

சுனாமியால் காவுகொல்லப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 13 ஆண்டுகள் உருண்டோடியுள்ளபோதும், அது ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் எம் நெஞ்சைவிட்டு நீங்காமலேயே உள்ளன.

இன்றை தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் ஆழிப் பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவுகளில் சூரியனின் செய்திச் சேவையும் தன்னை இணைத்துக்கொள்கிறது.

இதனிடையே, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூறும் பொருட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களை கோரியுள்ளது.

இன்று முற்பகல் 9.25 தொடக்கம் 9.27 வரையில் மௌன அஞ்சலி செலுத்துமாறு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தெல்வத்த- பெரேலிய ஆழிப்பேரலை நினைவுத் தூபிக்கு அருகிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *