நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஏழு அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

(UTV|COLOMBO)-பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சதொச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசி 62 ரூபாவுக்கும், உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட சிவப்பு அரிசி 73 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

இறக்குமதி செய்யப்பட்ட சம்பாவின் விலை 71 ரூபாவாகவும், நாட்டரசி ஒரு கிலோவின் விலை 82 ரூபாவாகவும் பேணப்பட வேண்டும்.

சதொச நிறுவனத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 135 ரூபாவுக்கும், உருளைக்கிழங்கு 139 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் விலை 100 ரூபாவும், பருப்பின் விலை 124 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலி 515 ரூபாவாகும்.

லங்கா சதொச நிறுவனத்தின் 372 விற்பனை நிலையங்களில் இந்த விலைமட்டத்தில் பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

காகில்ஸ், கீல்ஸ், ஆப்பிக்கோ, லாவ் ஆகிய விற்பனை நிலையங்களிலும் இதே விலை மட்டத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சில விற்பனை நிலையங்களில் இந்த விலை மட்டத்தையும் விட குறைவாகவும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஏழு அத்தியாவசிய பொருட்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நிலையான விலை மட்டத்தின் கீழ் பேணுமாறு வாழ்க்கை செலவின குழு லங்கா சதொச உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஏழு அத்தியாவசிய உணவுப்பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறான வியாபாரிகள் குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *