(UTV|ANURADHAPURA)-சிறுநீரக நோய் பரம்பலை கட்டுப்படுத்தும் நோக்கில் அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
அநுராதபுரம் மகாவுலன்குலம திப்பட்டுவாவ ஸ்ரீ விஜய விகாரையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் திப்பட்டுவாவ ஸ்ரீ விஜய விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.
பின்னர் பிரித் பாராயணம் செய்யப்படுகையில் விகாரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தலாவ, பஹலதலாவ, கல்நேவ, திறப்பனே ஆகிய பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 10 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை தொலைதூர கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தினூடாக திறந்து வைத்தார்.
சிறுநீரக நோய் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் செயற்திட்டம் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, வடமத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]