(UTV|COLOMBO)-டுபாயில் கைதான ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை அழைத்துவர ஏழு பேர் கொண்ட காவல்துறைக் குழு இன்று டுபாய் பயணமாக உள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த குழுவில் பல்வேறு துறைச்சார்ந்த 7 பேர் அடங்குகின்றனர்.
சட்டமா அபதிர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள், குற்ற புலனாய்வு திணைக்களத்தின் 2 அதிகாரிகள், மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்ளத்தின் அதிகாரி, வெளிவிவகார அமைச்சு மற்றும் நிதி மோசடி விசாரணைப்பிரிவின் அதிகாரி ஆகியோரும் அந்த குழுவில் அடங்குகின்றனர்.
உதயங்க வீரதுங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் ராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த அதிகாரிகள் அதுதொடர்பாக அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் வழியில் உதயங்க வீரதுங்க கடந்த 4 ஆம் திகதி டுபாய் வானூர்தி நிலையத்தில் வைத்து, சர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மிக விமான கொள்வனவு தொடர்பில் மோசடி இடம்பெற்றமை தொடர்பில் நிதி சலவைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]