காவல்துறை தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி;

(UTV|INDIA)-தமிழகம் – திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி திருவெறும்பூரில் உந்துருளியில் பயணித்த தம்பதி மீது காமராஜ் என்ற காவலர் தாக்குதல் நடத்தி உள்ளார்.

நிற்காமல் சென்றவர்களை துரத்திச்சென்று தாக்கியதால்தான் விபத்து நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தலைகவசம் அணியாமல் உந்துருளியை ஓட்டிச் சென்றவரை காவல்துறையினர் தடுத்தபோது விபத்து நேரிட்டு உள்ளது.

இரு சக்கர வாகனத்தை துரத்திய காவல்துறையினர்; உதைத்ததில் கீழே விழுந்த கர்ப்பிணி மீது வேன் மோதி உள்ளது.

இதனால் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

கணவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை கண்டித்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

அங்கு அசாம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *