ஜோசப் ஜாக்சன் மரணம்

(UTV|AMERICA)-பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட மைக்கல் ஜாக்சன் அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜீன் 25-ம் தேதி உயிரிழந்தார்.
அவரது தந்தை ஜோசப் ஜாக்சன் (89) லாஸ் வேகாஸ் நகரில் தனிமையில் வசித்து வந்தார். இவரே ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கெல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் கடந்த பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் நேற்று மாலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவலை ஜாக்சன் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிசெய்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *