துருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அர்துகான் பதவியேற்பு

(UTV|TURKEY)-துருக்கியின் புதிய அரசியலமைப்பு முறையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரஜப் தய்யிப் அர்துகான் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் பதவியேற்பு வைபவமும் நேற்று இடம்பெற்றது.

சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தலைநகர் அங்காராவில் அமைந்துள்ள தேசிய மன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது. அதனை அடுத்து பதவியேற்பு வைபவம் ஜனாதிபதி மாளிகை கட்டட தொகுதியில் இடம்பெற்றது.

கடந்த ஜூன் 24ம் திகதி இடம்பெற்ற துருக்கி ஜனாதிபதி தேர்தலில் 52.5 வீதமான அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அர்துகான் வெற்றிபெற்றார். இந்தத் தேர்தலானது துருக்கியை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு மாற்றும் தேர்தலாக இடம்பெற்றது.

“இந்த புதிய ஜனாதிபதி முறையுடன், நாங்கள் புதிய ஆட்சிமுறையொன்றுக்கு மாறுகின்றோம். இது எமது 150 வருட ஜனநாயக தேடல் மற்றும் எமது 95 வருட குடியரசு வரலாற்றில் நாம் அனுபவித்த விடயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” என தனது பதவியேற்பு உரையில் அர்துகான் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 21 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் துருக்கி அதிகாரிகள் விருந்தினர்கள் உள்ளிட்ட சுமார் 10,000 பேர் கலந்துகொண்டனர்.

அதனை அடுத்து, புதிய அரசியலமைப்பு முறையின் முதலாவது அமைச்சரவையான 16 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி அர்துகான் அறிவித்தார்.

இதேவேளை, துருக்கியின் புதிய அரசியல் முறைமைக்கமைய துணை ஜனாதிபதியாக Fuat Oktay நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் பிரதமர் அமைச்சரகத்தில் துணை செயலாளராக பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *