(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
நீதித்துறைக்கான நியமனங்களை வழங்கும் போது தாம் தனித்து தீர்மானங்களை மேற்கொள்வதில்லை.
அனைத்து தரப்புடனும் கலந்துரையாடியப் பின்னரே அது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.