இந்தியாவின் 72ஆவது சுதந்திரதினம் இன்று…

(UTV|INDIA)-பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியாவிற்கு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் மூலமாக, சட்டவாக்கத்திற்கான இறைமை இந்திய அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திரமடைந்தது.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரித்தானியாவின் பிரதமராக கிளமென்ட் ரிச்சட் அட்லீ (Clement Richard Attlee) பதவி வகித்திருந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக ஜவகர்லால் நேரு இந்தியக் கொடியினை ஏற்றினார்.

இதேவேளை, இன்றைய 72ஆவது சுதந்திரதினம் செங்கோட்டையில் நடைபெறவுள்ளதுடன், பிரதமர் நரேந்திர மோடி அங்கு உரையாற்றவுள்ளார்.

அத்துடன், பிரதமர் மோடியினால் Ayushman Bharat என்ற பெயரிலான மிகப்பெரிய சுகாதாரத் திட்டமொன்று அறிவிக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *