(UTV|PAKISTAN)-கள்ளக்காதலில் ஈடுபட்ட மகளை கண்ட தந்தை – பின்னர் நடந்த விபரீதம்
கள்ளக்தொடர்பில் ஈடுபட்டு குடும்ப கௌரவத்தை சீர் குலைத்ததாக பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானை சேர்ந்தவர் இக்பால். இவரின் மகள் பவுசியா. பவுசியாவிற்கு இம்ரான் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதனையறிந்த இக்பால், பௌசியா மற்றும் இம்ரான் மீது ஆத்திரம் கொண்டு அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டமிட்டார்.
பின் பவுசியாவை தீவிரமாக கண்காணித்தது வந்துள்ளார் அவரது தந்தை
இந்நிலையில், நேற்று பவுசியா இக்பாலை சந்திக்க சென்றுள்ளார்.
பவுசியாவை பின்தொடர்ந்த இக்பால், இம்ரான் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
குடும்ப கௌரவத்தை கெடுத்துவிட்டாயே என கூறியவாறே, இக்பாலும் அவரது உறவினர்களும் இம்ரானையும், பவுசியாவும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]