தந்தையையும், மகனையும் விழுந்து விழுந்து வரவேற்கும் அயல் நாட்டவர்கள்

(UTV|COLOMBO)-டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று புது டெல்லியில் Virat Hindustan சங்கத்தால் நடத்தப்படவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியாவுக்கு சென்றிருந்தார்.

இவருக்கு பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்குச் சென்று சிறப்பாக வரவேற்பளித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று காலை டெல்லி விமான நிலையத்தை அடைந்த நாமலை, Virat Hindustan சங்கத்தின் தலைவர் Dr.Suneel Maggo மற்றும் Virat Hindustan சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஹரிஷ் ஷர்மா ஆகியோர் நேரில் சென்று வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, புது டெல்லியில் Virat Hindustan சங்கத்தினால் நடத்தப்படவுள்ள விழாவுக்கு மஹிந்தவை சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு வந்து அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று மஹிந்த புது டெல்லிக்கு விஜயம் செய்துள்ளதுடன், இன்று இந்தியா – இலங்கைக்கு இடையிலான உறவு குறித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *