பாகிஸ்தான் மிளகாயில் புற்றுநோய் – மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.
(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீளவும் மிளகாய்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அதில் 25 மிளகாய் கொள்கலன்கள் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு…