இன்று முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது. அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் பின்வருமாறு இடம்பெறவுள்ளது. 0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த வகுப்பின் மின் அலகு ஒன்றின் விலை 12 ரூபாய் ஆகும். 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம்…

Read More

விடுதலை செய்யப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

(UTV | கொழும்பு) – பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை மீள ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இதற்கு முன்னர் பிணை…

Read More

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.

(UTV | கொழும்பு) – காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி தொடங்கியது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாகையிலிருந்து பயணிகள் கப்பல்…

Read More

காசா மருத்துவமனை தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்.

(UTV | கொழும்பு) – காசா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் 2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே நொண்டிசாக்கையே தெரிவித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் தூண்டுதல்கள் இருந்தால் கூட மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என சுமந்திரன்தெரிவித்துள்ளார். முன்னர் இடம்பெற்ற சம்பவம் மீண்டும் நிகழ்கின்றது என்ற உணர்வை தவிர்க்க முடியாமல்…

Read More

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்

தாய்லாந்து தூதரகம் மற்றும் இலங்கை ஹலால் Halal Accreditation Council (HAC) இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சிகள் மூலம் டொலர் வருமானத்தை ஏற்படுத்த முயற்சி ஹலால் சான்றளிக்கப்பட்ட உற்பத்திகளை கொண்ட இருதரப்பு வர்த்தகம் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் பிரதான நோக்கத்துடன், தாய்லாந்து அரசாங்கம் 2023 ஓகஸ்ட் 16 முதல் 19 வரை இலங்கை வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருடான சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தது. ஏற்றுமதி அமெரிக்க டொலர் வருமானத்தை வலுப்படுத்துவதும் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வளர்ந்து வரும்…

Read More

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் குறித்து வெளியான தகவல்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வாறு உயிரிழந்த அனுலா ஜயதிலக என்ற பெண்ணின் சடலம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

கொழும்பு மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள்!

(UTV | கொழும்பு) – கொழும்பு – காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில்  பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ராகமைப் பகுதியைச் சேரந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். எனினும், இந்த ஆறு குழந்தைகளுக்கும் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குறித்த  வைத்தியசாலையில் குழந்தை…

Read More

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற – அலி சஹீர் மௌலானா.

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் கடந்த தினம் பதவி நீக்கப்பட்டார். இந்நிலையில், வெற்றிடமான குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அலி சஹீர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

நண்பிகள் இருவர் ஒன்றாக தூக்கில் – கிளிநொச்சியில் பெரும் சோகம் (கடிதம்)

(UTV | கொழும்பு) – கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை’ என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்  இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சுரேஸ்குமார் தனிகை, லோகேஸ்வரன் தமிழினி ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன்…

Read More

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது. கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகை மற்றும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்கள் , மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு. திருமுருகன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சரித்திர முக்கியத்துவம்…

Read More