சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர!

(UTV | கொழும்பு) – காலமான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

Breaking News = சஜித்துக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு!

(UTV | கொழும்பு) – மாளிகாவத்தை வீதிகள் உட்பட கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பகல் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தையடுத்து நீதிமன்றத்தால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

(UTV | கொழும்பு) – அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…

Read More

புதிய இராஜாங்க அமைச்சர் பதவி பிரமாணம்!

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கெளரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் என தாம் நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வத்தளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன. இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 01.00 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இறுதிச் சடங்குகளின்…

Read More

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

(UTV | கொழும்பு) – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் இன்று கூடுகின்றது. மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு, நேற்று இரவிரவாக மத்திய குழுவில் அங்கம் வகிப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு திருகோணமலையில் இன்று (27.1.2024) கூட்டம் இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்றும் நடைபெறவுள்ளது. நாளை கட்சியின் தேசிய மாநாடும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த 21 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின்…

Read More

இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிய லிட்ரோ நிறுவனம்!

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும்…

Read More

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், அரசியலமைப்பின் 70 வது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகள் நிறைவடையும் என குறித்த வர்த்தமானி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

சனத் நிஷாந்தவின் மரணம் – முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கந்தானை மொரவத்த பகுதியில் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சரின் சாரதியான பிரபாத் எரங்க…

Read More