சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!

(UTV | கொழும்பு) –

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.

இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 01.00 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இறுதிச் சடங்குகளின் பின்னர், உடல் ஊர்வலமாக ராஜகதலுவ கத்தோலிக்க மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுடவுள்ளது.

கடந்த 25ஆம் திகதி காலை இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப், கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் கொள்கலன் வாகனத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்தனர். இராஜாங்க அமைச்சரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நேற்றிரவு ஏராளமான மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடல் கண்டி – ஹதெனிய – மரவணாகொட பொது மயானத்தில் நேற்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *